தமிழர் சித்தார்த் அவமதிப்பு - கன்னடர் பிரகாஷ் ராஜ் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!





தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. என்று கூறிய நாம் தற்போது காவிரி நீரை பெறுவதற்காக பல கட்டங்களை கடந்து போராடியும்,காவிரி நீரை அண்டை மாநிலத்தில் இருந்து பெறுவதற்காக திண்டாடி வருகிறோம் என்று தான் கூற வேண்டும்.


அந்த வகையில் தமிழர்கள் என்றாலே சற்று வெறுப்பு உணர்ச்சியோடு பார்த்து வரும் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள், நடிகர் சித்தார்த்தின் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரை பேச விடாமல் அரங்கை விட்டு  வெளியேறக் கூடிய வகையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


இந்தியாவில் பிறந்த அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை அறிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொள்வது முறையா? என்று கேட்க கூடிய அளவு இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக திகழும் நடிகர் சித்தார்த் தற்போது தனது நடிப்பில் வெளி வந்திருக்கும் திரைப்படத்தில் ஒரு சிறுமிக்கும் அவரது சித்தப்பாவிக்கும் இடையே நடைபெறக்கூடிய பாசப் போராட்டத்தை திரைப்படமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.


இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமலஹாசன் நடிகர் சித்தார்த்தை புகழ்ந்து பேசியதோடு, இந்த படத்தைப் பற்றியும் பெருமிதத்தோடு பேசி இருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகரையும் இந்த படத்தை இயக்கிய இயக்குனரையும் படத்தை தயாரித்த தயாரிப்பாளரையும், வெகுவாக அவர் பாராட்டி இருப்பது அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது.


மேலும் படத்திற்காக பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகர் சித்தார்த் இவரது ப்ரோமோஷன் பணியினை பெங்களூருவில் மேற்கொள்ள நிகழ்வில் தான் பிரச்சனை ஏற்பட்டது.


திரைப்படத் துறையைச் சார்ந்த சித்தார்த் தமிழர் என்பதால் காவிரி பிரச்சனையை மையமாகக் கொண்டு தமிழ் படத்துக்கு பெங்களூருவில் பிரமோஷன் பணிகள் செய்யக்கூடாது என்றும் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பேசும் போதே பேசக்கூடாது என்று கன்னட அமைப்பைச் சார்ந்தவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.


மேலும் ப்ரோமோசனை சமரசமாக முடிக்க பல வகைகளில் அந்த அமைப்பினரிடம் சமரசம் பேச முயன்ற போதும், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் நடிகர் சித்தார்த் தமிழர் என்ற ஒரே காரணத்தால் அந்த அரங்கத்தை விட்டு வெளியேற நெருக்கடியை தந்தார்கள்.


இதனை அடுத்து அந்த அரங்கே விட்டு தமிழர் சித்தார்த் வெளியேறிவிட இந்த நிகழ்விற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்ற வேளையில் பிரபல கன்னட நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்.


மேலும் மிகப் பெரிய தவறை சுட்டிக்காட்டி அவர் பல சகாப்தங்களாக இந்த காவிரி நீர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் கட்சிகளும் ஒரு காரணம் என்பதால் மத்திய அரசு தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் ஒரு கன்னடராக, கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கோரி சித்தார்த்துக்கு நடந்ததை போல இனி வருங்காலத்தில் யாருக்கும் நடக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.