புது கார் வாங்கியுள்ள ஆமீர் -பாவனி ஜோடி..! - என்ன கார்-ன்னு பாருங்க..!

 

அண்மைக்காலமாக சின்னத்திரை சீரியல்களில் களைகட்டி நடித்து வரும் சீரியல் நாயகி பவானி ரெட்டி பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டு இருந்திருக்கிறார் என்ற விஷயம் பலருக்கும் தெரியும். இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். 

இவர் மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போது இதைப்பற்றி மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். மேலும் பிக் பாஸ் தொடரில் இவரோடு அமீர் என்பவர் பயணம் செய்திருக்கிறார். இந்த சமயத்தை தான் அமீர் பவானியை தொடர்ந்து காதலித்து வந்ததோடும் மட்டுமல்லாமல், அதற்கான ப்ரொபோஸ் தொடர்ந்து செய்திருக்கிறார். 

ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளாத பவானி சீசன் முடிந்த பிறகு அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

இதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது இவர்கள் இருவரும் ஒரு புது காரை வாங்கி இருக்கிறார்கள். இந்த கார் ஆனது டாடா ஹரியர் மாடலை சார்ந்தது. 

இந்த காரின் விலை ஏறக்குறைய 28 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இருவரும் இணைந்து காரோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆக்கிவிட்டது. மேலும் சில ரசிகர்கள் இந்த காரில் எங்களையும் அழைத்து செல்வீர்களா? என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள். இதற்கான பதிலை விரைவில் அமீர் மற்றும் பவானி தெரிவிப்பார்கள் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்தக் காரின் பக்கத்தில் நின்று கொண்டு அவர்கள் சிறப்பாக போஸ் தந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இந்த புது காரில் எந்த பகுதிக்கு முதல் ரைட் போகிறார்கள்.