வேட்டையாடு விளையாடு 2 ..! - வெறித்தனமான அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்..!

 

தமிழ் திரையுலகில் வாசுதேவமேனன் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கிறார். இவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. 

இது டிஜிபியாக ராகவன் கேரக்டரில் நடிகர் கமலஹாசன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். 

இந்தப் படத்தை ரவிவர்மா ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கத்தில் இசை அமைத்து படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ஆவலாக காத்திருந்தார்கள்.

இதனை அடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்தக் கூடிய விதமாக வேட்டையாடு விளையாடு படத்தின் பகுதி இரண்டு விரைவில் வெளிவர உள்ளதாகவும், அது நிமித்தமாக கமலஹாசன் இடம் பேசி விட்டதாக இயக்குனர் கௌதம் மேனன் தற்போது கூறி இருக்கிறார்.

துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்கு பின் வேட்டையாடு விளையாடு பாகத்தின் இரண்டாம் பகுதி பணிகளை துவக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதனை அறிந்து கொண்ட கமல் ரசிகர்கள் அந்த படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் மனதிற்கு ஏற்ப இந்தப் படம் வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.