ஓஹோ.. அப்படியா சங்கதி.. மீண்டும் ஜிவி பிரகாஷ்-ற்கு ஜோடியாகும் ஹீரோயின்..!

 


திரையுலகில் ஆரம்ப நாட்களில் ஜிவி பிரகாஷ் ஒரு இசை அமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகனாக படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்ததை அடுத்து இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் இசையமைத்த பாடல்கள் மட்டுமல்லாமல் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனதாக இன்று வரை உள்ளது. மேலும் இவரது பாடல்கள் 2கே கிட்ஸ் விரும்பு கேட்கும் பாடல்கள் என்று கூறலாம். இதனை அடுத்து இவர் தனது 25 வது படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்திற்கு "கிங்ஸ்டன்" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்த படத்தை காதலிக்க யாரும் இல்லை என்ற படத்தை இயக்கிய கமல் பிரகாஷ் இயக்க இருக்கிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜிவி பிரகாஷ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. 

இதனை அடுத்து படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் கதாநாயகி யார் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்படலாம். இந்த நடிகை ஏற்கனவே தமிழ் சினிமாவில் "பேச்சுலர்" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். 

குறிப்பாக அந்தப் படத்தில் இவர் ஜிவி பிரகாஷுக்கு ஏற்கனவே ஜோடியாக நடித்தவர். இப்போது அந்த நடிகை யார்? என்பதை நீங்கள் கட்டாயம் கண்டுபிடித்து இருப்பீர்கள். நீங்கள் நினைப்பது போலவே திவ்ய பாரதி தான் இந்த படத்திலும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இதனை அடுத்து இந்த படம் சிறப்பான படமாக அமையும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதியின் கேரியரில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

மேலும் விரைவில் இத்திரைப்படம் எப்போது திரைக்கு வரும் அதை காண்பதற்கும் அவர்கள் ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதுபோல சுடச்சுட சினிமா செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வண்ணத்திரை பக்கத்தை பார்வையிடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.