இந்த நடிகைகளுக்கு அப்புறம் ஜோவிகா தான் டாப் ஹீரோயின் ஆகப்போறா.. சீரியஸ் வனிதா.. சிரிக்கும் நெட்டிசன்கள்..!

 

என்னதான் மகள் மேல் பாசம் இருந்தாலும் இப்படியா? என்று பேசக்கூடிய வகையில் தற்போது வனிதா பேசியிருக்கும் பேச்சால் இணையமே சிரிக்கிறது. நடிகை வனிதா திரைப்படத்தில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் பயணத்தில் கலந்து கொண்டதின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய ஒருவராக அதுவும் வாயாடி வனிதா அக்கா என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

தன்னைப் பற்றி நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்திருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், தற்போது தனது மகளை வளர்த்து விட களம் இறங்கி இருக்கும் வனிதா பிக் பாஸ் சீசன் 7 பற்றிய ரிவியூக்களை தனியார் youtube சேனலில் செய்து வருகிறார். 

இவர் ரிவியூ செய்யக்கூடியதை கேட்பதற்கு என்றே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பதால் இந்த பணியில் ஒரு அட்ராசிட்டியை செய்துவிட்டார். மேலும் பிக் பாஸ் சீசன் 7ல் இவர் மூத்த மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று தாய்க்கு ஏற்ப தப்பாமல் பிறந்திருக்கிறார் என்பதை மெய்ப்பித்து விட்டார். 

பெரியவர்களை மதிக்காமல், வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் துடுக்குத்தனமாக பேசிய ஜோவிகாவின் பேச்சுக்கள் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் இந்த வார ஓட்டிங்கில் இவருக்கு கடைசி இடம் தான் கிடைத்துள்ளது. 


எனவே இவர் போட்டியில் இருந்து எலிமினேட்டாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் ஜோவிகாவிற்கு 18 வயது ஆகிறது. அவருக்கு திரையுலக வாழ்க்கை இன்னும் 20 வருஷங்களுக்கு மேல் இருக்கும். இவர் திரிஷா இல்லை, நயன்தாரா மாதிரி ஒரு ரவுண்ட் வருவார் என நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த பேச்சை தான் தற்போது நெட்டிசன்கள் வைரலாக்கி உள்ளதோடு உங்க பொண்ணுனா இஷ்டத்துக்கு பேசுவீங்களா? என்று ஏக வசனத்தில் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். 

தற்போது இந்த வீடியோ தான் வைரலாக பரவி பலரும் பேசக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. நீங்களும் ஒரு முறை இந்த வீடியோவை கேட்டால் உங்களுக்கு அதில் கூறப்பட்ட செய்தி சிறப்பாக புரிந்து விடும்.