சீச்சீ.. காசுக்காக இப்படியா? - நடிகை தமன்னாவை. அந்த போஸ்க்காக கேவலப்படுத்திய பிரபல நடிகர்..!

 

தமிழக இளைஞர்களின் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் தமன்னா முன்னணி ஹீரோயினியாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். இவர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெய்லர் திரைப்படத்தில் காவாலா என்ற ஒரு பாடலுக்கு போட்ட ஆட்டத்தால் தமிழகமே அதிர்ந்தது. 

இதனை அடுத்து இவர் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவரை பற்றி படு கேவலமான விமர்சனத்தை திரைப்பட விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் முன் வைத்து இருக்கிறார். 

இதற்குக் காரணம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்று திரைத்துறையிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை தமன்னா பத்திரிக்கை ஒன்றில் நிறைய பணத்தை வாங்கிக்கொண்டு ஆபாசமான போஸினை கொடுத்திருக்கிறார். 

இதற்கு இவரது வருங்கால கணவரும் காதலனும் ஆன விஜய் வர்மா அனுமதித்திருப்பது தான் பயில்வானின் ஹைலைட் பேச்சாக அமைந்துவிட்டது. 

நடிகை தமன்னா பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதோடு அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இரு இல்லத்தாரும் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில் தன் கணவரோடு கண்ணத்தோடு கண்ணம் ஒட்டிய ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற விடுவார். 

அந்த வகையில் இவர்கள் இருவரும் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். மேலும் திருமணம் முடிந்த கையோடு சினிமாவில் ஒதுங்க தமன்னா முடிவெடுத்து இருப்பதால் தற்போது தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் காசாக்கி வருகிறார். 

இதற்கு இவரது காதலன் விஜய் வர்மாவும் ஒப்புக்கொண்டதனால் தான் சமீப காலமாக உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை இவர் குளோபல் ஸ்பா இந்தியா என்ற பத்திரிக்கைக்கு அட்டை படமாக கொடுத்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து இவரது வீடியோ ஒன்று Instagram's பக்கத்தில் பரவி வருகிறது. இதில் விதவிதமான ஆடைகளை உடுத்தி எப்போதும் இல்லாத கவர்ச்சியில் மேனி அழகை மெர்சலாக காட்டி இருக்கிறார்.