பெற்றோர் சம்மதத்தோடு காதலனை கைபிடிக்கும் பிரபுவின் மகள்..! - யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா..?

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இவரை போலவே இவரது மகன் விக்ரம் பிரபுவும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். 

இந்த நிலையில் நடிகர் பிரபுவின் மகளுக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அதுவும் இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இரு விட்டாரும் அமர்ந்து பேசி காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள். 

இதனை அடுத்து திருமண வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டு வருகிறது என கூறலாம். அது சரி மணமகன் யார்? அந்த அதிர்ஷ்டசாலி காதலன் யார்? என்று நீங்கள் யூகிக்கலாம். இவர் வேறு யாரும் இல்லை மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் ஒரு மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். 

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதோடு மட்டுமல்லாமல் டேட்டிங்கும் சென்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து பிரபு குடும்பத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு திருமணத்தைப் பற்றி வெளிவரும் என்று கூறுகிறார்கள். 

பிரபுவின் மகள் ஏற்கனவே தனது உறவினரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபுவின் ரசிகர்கள் அனைவரும் பிரபுவுக்கும் அவரது மகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் பக்கத்திற்கு லைக்கினை கொடுத்து வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.