விசித்ராவை போல என்னையும் படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்..!! - பெயரை ஓப்பனாக ஷகிலா..!

 

தற்போது பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டிருக்கும் கவர்ச்சி நடிகை விசித்ரா, மறக்க முடியாத டாஸ்க் நிகழ்வில் தன்னை பிரபல நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த விஷயத்தை பற்றி கூறி கடுமையான அதிர்வடைகளை ஏற்படுத்திவிட்டார். 

இதனை அடுத்து சினிமாவில் நிகழக்கூடிய அட்ஜஸ்ட்மெண்ட்களை குறித்து பரவலாக அனைவரும் பேசி வருவதோடு, அதை தடுத்து நிறுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி பேசி வருவதோடு பல்வேறு கருத்துக்களையும் கூறி வருகிறார்கள். 

மிகப் பிரபலமான நடிகை தன்னை படுக்கைக்கு அழைத்த நடிகரின் பெயரை சொல்ல தயங்கிய நிலையில், தற்போது ஒரு மலையாள கவர்ச்சி நடிகையான ஷகிலா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். 

இவர் அண்மையில் You Tube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது விசித்ரா தனது தோழி என்றும் இருவரும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றி இருப்பதை ஷேர் செய்தார். மேலும் தனது அனுபவங்களை பேசிய அவர் விசித்ராவை ரூமுக்கு வரச் சொல்லி டார்ச்சர் செய்த அந்த நபரின் பெயரை விசித்ரா குறிப்பிட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதனை அடுத்து இவரும் தெலுங்கு திரை உலகில் வேலை பார்த்ததாகவும், நடிக்க வந்த ஆரம்ப நாட்களிலேயே பலவிதமான போராட்டங்களை சந்தித்ததாகவும் கூறிய நிலையில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதுவும் இவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த ஒருவர் பற்றியது தான். ஆனால் இவர் விசித்ராவை போல் மூடி மறைக்காமல் அந்த நபரின் பெயரையும் போட்டு உடைத்து விட்டார். இவர் வேறு யாரும் இல்லை அல்லரி நரேஷின் தந்தையும், எழுத்தாளரும் இயக்குனருமான ஈவிவி சத்தியநாராயணா. 

இதைக் கேட்கும் போது அனைவருக்கும் சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் இது போல மனதில் வக்கரத்தோடு பிரபலமாக ஜொலிக்க கூடிய பலர் இன்னும் உலகில் உலாவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதனை உதாரணமாக கூறலாம். 

இவர் நடித்த படத்திற்கு உரிய சம்பளத்தை பெற்ற பிறகு அவர் என்னை தன் படுக்கைக்கு அழைத்து அடுத்த பட வாய்ப்பை தருவதாக கூறினாராம். இதனை அடுத்து தற்போது உங்கள் படத்தில் நடித்ததற்கு எனக்கு சம்பளம் கிடைத்து விட்டது. 

மீண்டும் உங்கள் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று பதில் அளித்ததாக ஷகிலா கூறியிருக்கிறார். மேலும் இன்று அந்த நபர் உயிரோடு இல்லை. எனினும் டோலிவுட் மீடியாக்களிடம் இது பற்றி பேச நான் தயாராக இருக்கிறேன். 

அவர் என்னை தனது அறைக்கு அழைத்தது உண்மை என்ற கருத்தை ஆணித்தரமாக முன் வைத்தார். தெலுங்கு திரை உலகில் 1982ல் இயக்குனராக வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்தாலும், அதன் பிறகு நகைச்சுவை படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.