சீனு ராமசாமி போல பெண் விவகாரத்தில் சிக்கி சீரழிந்த பிரபலங்கள்..! - யார் யாருன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க..!


திரைத் துறையில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் மார்க்கெட்டை காலி செய்யக் கூடிய விதமாக அவர்களை பெண்களோடு தொடர்பு படுத்தி பேசுவது தற்போது அதிகரித்து வருகிறது. 


இந்த பேச்சுக்களில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும். தற்போது சினிமாவில் பிரபலமாக திகழக்கூடிய சில நடிகர்கள் இது போன்ற பெண்கள் விஷயத்தால் சீரழிந்து மக்கள் மத்தியில் செல்லா காசாக மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கி வருகிறது. 

அப்படிப்பட்ட பிரபலமான சில நடிகர்கள் யார்? யார்? இவர்கள் பெண்களால் சீரழிந்த கதை என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் கண்ணதாசனுக்கு பிறகு வைரமுத்து என்று கூறக்கூடிய அளவு தனது பாடல் வரிகளால் தமிழக இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்து தேசிய விருதைப் பெற்ற கவிஞர் வைரமுத்துவின் மீது மீ டு புகாரை பாடகி சின்மயி கொடுத்ததை அடுத்து வைரமுத்துவிற்கு வாய்ப்புகள் குறைந்து போனது. 

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வைரமுத்து இது உண்மைக்கு புறம்பானது என்று கூறியும், யாரும் அதை பொருட்படுத்தவில்லை. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வரிகளுக்கு இவரை உதாரணமாக கூறினாலும் மிகையாகாது. 

இவரை அடுத்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிய பேச்சானது இன்று இவரது வளர்ச்சியை பாதித்து உள்ளது.

இவரது நன்னடத்தையே கெடுக்கும் விதமாக இமானின் பேட்டி அமைந்து விட்டது. இவரைப் போலவே மன்சூர் அலிகான் லியோ பட விழாவில் பேசியது பலவிதமான சர்ச்சைகளை கிளப்பியது. இவர் மனதில் பட்டதை பேசுகிறேன் என்ற பெயரில் ஆபாசமான வார்த்தைகளை கொட்டி அனைவரது கண்டனத்திற்கும் உள்ளானார். 

அது மட்டுமல்லாமல் திரிஷாவுடன் அந்தரங்க காட்சியில் நடிக்க விடாமல் லோகேஷ் செய்துவிட்டார் என்று கூறிய சர்ச்சை பேச்சால் திரையுலகில் அதிர்வலைகள் ஏற்பட்டது. இதனை அடுத்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த சர்ச்சை முற்றுப் பெற்றுள்ளது.

இது போலவே சமூக ஊடகங்கள் அதிகளவு வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் எம் ஆர் ராதாவின் மகனாகிய ராதாரவி சினிமாவில் வில்லனாக நடித்தவர். சில வருடங்களுக்கு முன்பு நடித்த நடிகைகள் குறித்த சர்ச்சை கருத்துக்களை கூறி கண்டனத்திற்கு ஆளானார். 

இதனை அடுத்து இவரை திமுகவிலிருந்து அதிரடியாக நீக்கியது அனைவரும் அறிந்ததே. மேற்கூறிய பிரபல நடிகர்கள் அனைவருமே தங்களுக்கு கிடைத்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற விமர்சனங்களுக்கு உள்ளாகி மக்கள் மனதில் இருந்து ஒதுக்கி வைக்க கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.