“பசங்க ஜட்டி வெளியே தெரிஞ்சா.. பெண்கள்..” - விபரீத கேள்வியை முன் வைத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!

 

பனிமலர் பன்னீர்செல்வம் சில காலம் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி பிறகு பிரபல செய்தி வாசிப்பாளராக மாறினார். மேலும் இவர் தன்னை ஒரு திராவிட மாடலாகவும், பெரியார் வாதியாகவும் பெரியார் இசத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். 

சோசியல் மீடியாக்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீப காலமாக கோயிலுக்கு செல்வது, அங்கு பூஜை தட்டுக்களோடு நிற்பது போன்ற போஸ் தந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பல வித விமர்சனத்தை உருவாக்கினார். 

புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் பேட்டி கொடுத்து அசத்தி வரும் பனிமலர் பன்னீர்செல்வம் தற்போது பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கக்கூடிய வன்கொடுமைகளை குறித்து பேசி இருக்கிறார். 

அதற்கு உதாரணமாக நடிகை சாய் பல்லவியின் பேச்சினை எடுத்துக்காட்டாக கூறுகிறார். ஒரு பட வெளியிட்டு விழாவிற்கு சாய் பல்லவி புடவை அணிந்து கொண்டு வந்த போது அவரிடம் ஒரு நடிகையாக ஏன் நீங்கள் புடவை அணிந்து வந்திருக்கிறீர்கள். மாடர்ன் டிரசில் வரலாமே என்று கேட்டதற்கு அவர் புடவை தான் பாதுகாப்பான உணர்வை தருவதோடு தனக்கு கம்பர்ட்டபிலாக இருக்கிறது என்று கூறினார். 

இந்த விஷயத்தில் மாடர்ன் உடை பெண்களுக்கு ஒரு அபாயகரமானது என்ற சூழலை அவர் உருவாக்கி விட்டார் எனக்கூறி சாய்பல்லவியை நொந்து கொண்டார். அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பேசியவர் தன்னை பற்றி மோசமான கமாண்டுகள் வரும் போது இவருக்கு கட்டுப்படாமல் கோபம் வரும்.

ஆனால் அதனால் நாம் தான் பாதிக்கப்படுகிறோம் என்று கமெண்ட் செய்தவர்களை பற்றி கவலைப்படாமல் அப்படியே சென்று விடுவாராம். மேலும் இவர் பேசுகையில் ஒரு பெண் ப்ரா வெளியே தெரியும் படி வந்துவிட்டால் உடனே ப்ரா வெளியே தெரியுது சரி செய்யுங்கள் என்று கூறுவார்கள். 

அதே சமயத்தில் ஆண்களின் ஜட்டி வெளியே தெரியும் போது பெண்கள் யாராவது உன்னோட ஜட்டி வெளியே தெரிகிறது என்று சொல்லி இருக்கிறார்களா? அல்லது கிண்டலும், நக்கலும் செய்திருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

இதனை அடுத்து இவரது கருத்து யோசிக்க வைக்கும் படி இருந்தாலும் எவ்வளவுதான் நாகரிகத்தின் வளர்ச்சியில் நாம் இருந்தாலும் இன்னும் பெண்கள் பற்றிய அபிப்ராயங்கள் மிகச் சரியான அளவு ஆண்கள் மத்தியில் இல்லை என்று கூறலாம். 

இந்த உலகில் என்று இந்த பாலின வேறுபாடுகள் குறைகிறதோ அன்று பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று கூறலாம்.