“அது தப்பு இல்லயாம்.. இது தப்பாம்…” என்னங்கடா.. நியாயம்..? - திரிஷாவை வெளுத்து வாங்கிய பயில்வான்..!

 


மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு திரிஷாவை பற்றி முகம் கூசக்கூடிய அளவு பேசிய பேச்சால் பலரும் பல வகைகளில் மன்சூர் அலிகானை கண்டித்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை முன் வைத்து பேசினார்கள். 

இதனை அடுத்து என் மேல் எந்த தவறும் இல்லை என்று மன்சூர் அலிகான் கூறியிருந்தாலும்  இறுதியில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க, பிரச்சனை ஒரு வகையில் ஓய்ந்துள்ளது என்று கூறலாம். 

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஓய்ந்து விட்ட அந்தப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்து பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்து திரிஷாவை வெளுத்து வாங்கிவிட்டார். 

மேலும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளி வந்த வீடியோவில் மன்சூர் அலிகான் பார்க்கத்தான் கோமாளி, ஆனால் ஏகப்பட்ட விஷயத்தை தெரிந்து வைத்திருப்பவர். இவரை பகடை காயாய் பயன்படுத்தி விட்டார்கள். நான் நடிகைகளை பற்றி எந்த விதத்திலும் அவதூறாக பேசவில்லை. நடிகை கூறியதை தான் பேசுகிறேன். 

அதுவும் ரஜினியை விடவா மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியது தவறு இல்லை என கூறிவிட்டார். இதற்குக் காரணம் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சில் கூட திரிஷா இருக்கும் போதே அவருடன் அந்த சீன் இருக்கும் என நினைத்தேன் என கூறிய போது திரிஷா சிரித்தார்.

 ஆடியோ லாஞ்சில் பேசியது தப்பில்லை. ஆனால் பிரஸ் மீட்டில் பேசியது தான் தவறாகுமா? என்ற கேள்வியை பயில்வான் எடுத்து இருக்கிறார். அப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் ஆடியோ லாஞ்சிலேயே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம் .ஆனால் அதை அவர் செய்யவில்லை.

 திரிஷா என்னவோ கண்ணகி போல நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு காலத்தில் இதே திரிஷா கிழக்கு கடற்கரை சாலையில் ஃபுல் போதையில் முற்றிப்போய் டான்ஸ் ஆடியவர். இதனை அடுத்து போலீசார் இவரை வீட்டில் கொண்டு போய் சேர்த்ததை எல்லோரும் மறந்து விட்டார்கள். அப்போது எப்படி திரிஷாவை கண்டித்து அனுப்பினார்களோ, அது போல மன்சூர் அலிகான் இந்த விஷயத்தில் கண்டித்து அனுப்பி இருக்கலாம். 

இது மட்டுமா? திரிஷா ஆந்திரா சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஹோட்டலில் குளிக்கும் போது சிசிடிவி கேமராவில் அதை பதிவு செய்து ஒருவன் வெளியிட்டான் .அப்போது நடிகர் சங்கம் என்ன செய்தது என்று இந்த கேள்வியை முன் வைத்தார். 

மேலும் காண்டாகி 50 வயது நடிகர் விஜய்க்கு 39 வயதுக்கு மேலாகும் திரிஷா லிப் லாக் கொடுத்தது இனித்தது. ஆனால் மன்சூர் அலிகான் தொடாமல் பேசியது குற்றம்.. இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு வகைகளில் கேள்விகளை எழுப்பி திரிஷா பங்கப்படுத்திவிட்டார்.