பேசப்பட்ட சம்பளத்தில் 60% வாங்கிய காமெடி நடிகர்…! பேலன்ஸ் தராமல் டிமிக்கி தரும் தயாரிப்பாளர்.. வெடித்த மோதல்..!

 

காமெடி நடிகராக இருந்த வரை சம்பளத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக போய்க் கொண்டிருந்த இவரது நடிப்புத் தொழிலில் எப்போது ஹீரோவாக மாறினாரோ, அப்போதே சம்பள பிரச்சனை ஏற்பட்டு விட்டது. 

அந்த வகையில் இந்த காமெடி நடிகர் நடித்த படம் சரியாக போகவில்லை என்பதால் தற்போது தயாரிப்பாளர் பணம் கொடுக்க சாக்கு, போக்கு சொல்லி வருவதால் இவர்கள் இருவரிடையே மோதல் வெடித்துள்ளது. 

மேலும் காமெடி நடிகர் தான் நடித்த அந்த படத்திற்கு 60% மட்டும் தான் சம்பளத்தை பெற்றிருக்கிறார். மீதி 40% எப்போது தருவார் என்று தயாரிப்பாளர் இடம் கேட்க தயாரிப்பாளரோ வாங்கிய சம்பள அளவு கூட திரைப்படம் ஓடி வசூல் தரவில்லை. 

எனவே பிறகு பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டார். இதனை அடுத்து தற்போது இருவர் இடையேயும் கட்டப்பஞ்சாயத்து நடந்து வருவதாக கிசுகிசுக்கள் எமுந்துள்ளது. மேலும் ஹீரோவாக நடித்து கெத்து காட்டலாம் என்று நினைத்த இவருக்கு தற்போது பட்டை நாமம் போடப்பட்டது. 

எனவே சமூகமாக பேசி காரியம் சரியாக நடக்கவில்லை என்றால் அந்த 40% பணத்தை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட போவதாக அந்த நடிகர் தற்போது சொல்லி வருவதாக திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

இதனை அடுத்து அந்த தயாரிப்பாளர் பத்து படத்தில் ஒரு படம் தான் ஹிட் ஆகிறது. இந்த சம்பளமே உனக்கு ஜாஸ்தி என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்திலும் அந்த காமெடி நடிகர் பற்றி புகார் கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.