அடேங்கப்பா.. இத்தனை நாள் தெரியாம போச்சே.. கல்யாணத்துக்கும் முன் நடிகை மீனா காதலித்த நடிகர் இவரா..?

 

பாக்காத அப்படி பாக்காதே.. பார்வையாலே என்னை தாக்காதே.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கண்ணழகி மீனா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். நடிகை மீனா ஆரம்ப நாட்களில் ரஜினி அங்கிள் என்று அழைத்த ரஜினிகாந்த் உடனே ஜோடி போட்டு நடித்தவர். 

அது மட்டுமல்லாமல் சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன்.. என்ற பாடல் வரிகளுக்கு நேர்த்தியான முறையில் நடனம் ஆடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை மீனாவை உச்சகட்ட நடிகர் ஒருவர் அவர் வீட்டுக்கு சென்று பெண் கேட்டிருக்கிறார். 

அதில் முக்கியமானவர் சரத்குமார் நடிகை மீனாவின் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வீடு ஏறி பெண் கேட்டவர். ஆனால் அவருடைய அம்மா தற்போது தான் தன்னுடைய மகள் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். 

எனவே தற்போது எங்களுக்கு திருமண யோசனை ஏதுமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். ஆனால் மீனாவின் குடும்பத்தார் மீனாவை திரைத்துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபருக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்கிறார்கள். 

அதன்படி தான் வித்யாசாகர் திருமணம் செய்து நைனிகா என்ற ஒரு பெண் குழந்தைக்கு மீனா தாயாகி இருக்கிறார். அண்மையில் தனது கணவரை இழந்து விட்ட மீனா அதிலிருந்து வெளி வந்து மீண்டும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

நடிகை மீனா வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நடிகர் ஒருவரை காதலித்திருக்கிறார். பிறகு சில காரணங்களால் அந்த காதலரை கழட்டி விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?. அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, நடன புயல் நடிகர் பிரபுதேவா தான்.

இவர்கள் இருவரும் டபுள் சென்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த போது பல ரொமான்டிக் காட்சிகளிலும் படு நெருக்கமாக இருவரும் நடித்திருப்பார்கள். இதற்குக் காரணம் இவர் பிரபுதேவாவின் மீது காதல் வயப்பட்டு இருந்தார். பிரபுதேவாவுக்கான இமேஜ் அப்போதுதான் உருவாக்கிக் கொண்டிருந்தது. 

எனினும் மீனாவின் நலம் விரும்பிகள் பிரபுதேவாவை பற்றி அவரிடம் கூறியிருக்கிறார்கள். நடிகைகளை காதலித்து அவர்கள் வாழ்க்கையை அழித்தவர் தான் பிரபுதேவா, உன்னையும் அப்படி நினைத்து தான் காதலிக்கிறார். 

இது உண்மையான காதல் கிடையாது. எனவே அந்த காதல் வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை உண்மையாக்கும் படி பிரபுதேவாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் குழப்பத்தில் ஆழ்ந்த மீனா எதற்கு வம்பு வீட்டில் பார்க்கும் வரனையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரபுதேவாவிற்கு டாட்டா சொல்லிவிட்டார். 

தற்போது எந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா? இல்லையா? என்பது அவர்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரியும் என்று பேசி வருகிறார்கள்.