ஓர்க் அவுட் பண்ணும் போதே ஒரு பையனோட அது நடந்துடுச்சு.. சின்ன வயது ஆசையை உடைத்த பிரியா பவானி சங்கர்..!

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகை பிரியா பவானி சங்கர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் என்று திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பேட்டியினை அளித்து பெருவாரியான மக்கள் மத்தியில் பேசும் பொருள் ஆகி விடுவார். 

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்தவர் வெள்ளி திரையில் ஆரம்ப நாட்களில் சின்ன, சின்ன கேரக்டர்களை செய்து வந்தார். மேலும் இவர் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அடுத்த பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார். 

இதனை அடுத்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே, யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், ருத்ரன் போன்ற படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்று மிகவும் சிறப்பாக படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களிடம் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

இதனை அடுத்து தற்போது இந்தியன் 2 நடித்து வரும் இவர் ஈசிஆரில் பங்களா வாங்கி இவரது காதலன் ராஜவேல் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் சிறு வயதில் ஜிம்மில் ஒரு பையனை சந்தித்ததாக கூறினார். 

மேலும் அந்தப் பையனை ஜிம்மில் பத்து முறைதான் சந்தித்து இருப்பார். எனினும் அந்தப் பையன் மீது பிரியா பவானி சங்கருக்கு ஒரு கிரஷ் ஏற்பட்டதாம். எனினும் அந்தப் பையனோடு பேசியதோ, பழகியதோ கிடையாது. ஆனாலும் அந்தப் பையனை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் பிரியா பவானி சங்கருக்கு இருந்துள்ளது. 

இதனை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் பிரியா அவர் ஊர் பக்கம் இருக்கும் மில் ஓனர் ஒரு நல்ல எஸ்யூவி வண்டியை ஓட்டி, விடலை மீன் குழம்பினை வைத்து மாமியார் ரோடு சேர்ந்து சீரியல் பார்க்கக் கூடிய வகையில் அவரோடு சண்டை போடக்கூடிய குடும்பமாய் பார்த்து செட்டிலாக வேண்டும் என்று நினைத்தாராம். 

இந்த கருத்து தான் தற்போது சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவி இப்படி ஒரு ஆசை அவருக்கு இருக்கிறதா என்ற கோணத்தில் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.