கோலமாவு கோகிலா என்ற வேறுபட்ட கதைய அம்சம் நிறைந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இதனை அடுத்து தமிழில் இவர் பல முன்னணி ஹீரோக்களோடு இணைந்து காமெடி ரோல்களில் கலக்கி வருகிறார்.
மேலும் இவர் அண்மையில் சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர் பெங்களூரில் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் இந்த திருமணம் நடந்தது என்பதால் மிகவும் எளிமையான முறையில் நெருங்கிய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணத்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் சர்ச்சைகளை கிளப்பி விடும் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் இவர்களின் திருமணத்தைப் பற்றி பேசும் போது இருவரும் காதலித்த விவகாரம் எல்லோருக்கும் மிக நன்றாக தெரியும்.
எனவே எந்த விஷயம் வெளியில் தெரிந்தவுடன் பயந்து போன சங்கீதா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதை அடுத்து ரெடின் கிங்ஸ்லி அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்தார்.
இதனை அடுத்து தான் இவர்களது திருமணம் அவசர கோலத்தில் நடைபெற்றது. மேலும் பல திரை உலக பிரபலங்களால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த செய்தியானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இது தான் அவசர கல்யாணத்துக்கு காரணமா? என்று காதும் காதும் வைத்தபடி ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.
மேலும் இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து, உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.