கள்ளத்தொடர்பில் இருக்கும் சன் டிவி சீரியல் ஹீரோ..!!.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய கூத்து…

 

இன்னும் திருந்தாத ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் சீரியல்களில் சிறப்பான பெயரை பெறக்கூடிய வகையில் நடித்து விட்டு உண்மையான வாழ்க்கையில் வில்லத்தனத்தோடு இருக்கக்கூடிய சில நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி தனது சீரிய நடிப்பால் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். இதனை அடுத்து அதே சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் மீராவை தாங்கும் புருஷனாக நடித்து பலரையும் கவர்ந்து விட்டார். 

அமைந்தால் இவரை மாதிரி கணவர் தனக்கு அமைய வேண்டும் என்று பல தமிழக பெண்களும் ராகுல் ரவியை பார்த்து பொறாமை படக்கூடிய அளவில் அவரது நடிப்பு இருந்தது. இதனை அடுத்து இவர் 2020 ஆம் ஆண்டு லக்ஷ்மி நாயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இவர்கள் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தன் மனைவியோடு இணைந்திருக்கும் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற விடுவார். 

ஆனால் கடந்த ஒரு வருடமாக ராகுல் ரவி, லட்சுமி நாயரை பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இந்த பிரிவிற்கு காரணம் ராகுல் ரவி வேறொரு பெண்ணோடு கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அதனை அறிந்த மனைவி லக்ஷ்மி நாயர் கையும் களவுமாக பிடித்ததை அடுத்து போலீசில் புகார் அளித்து இருக்கிறார். 

தன்னைப் பற்றி போலீசில் புகார் கூறப்பட்டிருப்பதால் பயந்து போன ராகுல் ரவி தலைமறைவு ஆகிவிட்டார். தற்போது இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியாகி விட்டது. 

இந்த செய்தியை கேள்விப்பட்ட அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் ராகுல் ரவியின் செயல் இருப்பதாக பலரும் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.