ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தனது அபார திறமையை வெளிப்படுத்தி தென்னிந்திய திரை உலகை தன் பக்கம் திருப்பிய இயக்குனராக இயக்குனர் ஷங்கர் திகழ்கிறார்.
இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்.
இவரது ஒவ்வொரு திரைப்படமும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கூடிய வகையில் பாடல் காட்சிகள் முதல் கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துவிடும்.
இவரின் இரண்டு பெண்களில் ஒருவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவரை விட்டு பிரிந்து விட்டார். இதனை அடுத்து இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டருக்கு படித்திருந்தாலும் சினிமாவில் கொண்ட மோகத்தால் அப்பாவின் பேச்சை கேட்காமல் திரை உலகில் நடித்து பெயர் பெற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றவர்.
இந்த வகையில் இவர் விருமன் திரைப்படத்தில் அறிமுகமாகி கஞ்சப்பூ கண்ணாலே என்ற பாடலில் ரசிகர்களின் மனதை ஈர்த்துவிட்டார். இதனை அடுத்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வரும் அதிதி ஷங்கரிடம் இனி திரைப்படங்களில் நடிக்க வேண்டாம். திருமணம் செய்து கொள் என்று பல வழிகளில் இயக்குனர் ஷங்கர் வற்புறுத்தியும் அதைக் கேட்காமல் நடித்து ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதனை அடுத்து தன் சொல் கேளாத மகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எல்லாம் வீணாகிவிடும் என்பதை உணர்ந்து கொண்டு சுதாகரித்துக் கொண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தனது படப்பிடிப்பு பணிகளில் கவனத்தை மும்மரமாக செலுத்தி வருகிறார்.
அடுத்து அப்பாவின் பேச்சை கேட்காமல் ஓவராக ஆடிவரும் அதிதி ஷங்கருக்கு பலரும் அட்வைஸ் செய்து வருகிறார்கள். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.