“சரக்கு இல்லைனா வாழ்க்கையே இல்ல..!” உண்மையை உளறிய ஸ்ருதிஹாசன்..!

 

உலகநாயகன் கமலஹாசனின் மகளாகிய ஸ்ருதிஹாசன் பன்முகச் திறமையை கொண்டவர். ஆரம்ப நாட்களில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமாகி, அதன் பின் கதாநாயகியாக உருவெடுத்தார். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். 

தற்போது தமிழை விட தெலுங்கில் அவருக்கு அதிக அளவு வாய்ப்புகள் கிடைத்ததன் காரணத்தால் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து வருகிறார். இவர் தனது காதலனுடன் லிவிங் டுகதர் முறையில் மும்பையில் வசித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். அது மட்டுமல்லாமல் தனது காதலனோடு இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களின் மத்தியில் ஆசையை தூண்டிவிடுவார். 

மேலும் இவர் தற்போது பேட்டி ஒன்றில் பேசும் போது மது தனது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய பகுதியாக இருந்தது என்று கூசாமல் பேசி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு மது அருந்துவதால் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை புரிந்து கொண்டு அதிலிருந்து விலகி விட்டதாக கூறியிருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் குடிப்பழக்கம் உள்ளவர்களோடு தான் எப்போதும் தொடர்பில் இருப்பது இல்லை அவர்களை தவிர்த்து விடுவேன் என்று கூறியதன் மூலம் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை மிக தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 

இதனை அடுத்து சில ரசிகர்கள் இன்று மது குடிப்பது என்பது தண்ணீர் குடிப்பதைப் போலத்தான். அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று கேள்வி எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல், குடி குடியை கெடுக்கும் என்பதை உணர்ந்து கொண்டு அதிலிருந்து வெளி வந்திருக்கும் இவருக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்திருக்கிறார்கள். 

தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் விரைவில் ஸ்ருதிஹாசனுக்கு வந்து சேர வேண்டும் என ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். எனவே நல்ல கதையம்சம் உள்ள தமிழ் படம் அவருக்கு விரைவில் அமைய வேண்டும்.