இணைந்த கைகள் படத்தில் நடித்த அருண் பாண்டியன் மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு அன்பிற்கினியாள் என்ற படத்தில் அப்பா அருண் பாண்டியனோடு இணைந்து நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்று விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி நடிப்பில் கண்ணகி என்ற படம் வெளிவரவுள்ளது. அதே போல இவரது கணவரின் நடிப்பில் சபாநாயகன் என்ற படமும் ஒரே நேரத்தில் வெளிவர உள்ளது.
மேலும் கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தின் பிரஸ் மீட்டில் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சை பார்த்து சுடச்சுட பதில் அளித்து இருக்கிறார். உங்க வீட்டில் சண்டையா? ஒரே நாளில் இருவரது படம் ரிலீஸ் ஆவதாலும் சண்டை வரலாம். மேலும் உங்க வீட்டுக்காரர் உங்க படத்தை பார்த்தாரா? என்ன சொன்னார்.. என்றெல்லாம் பயில்வான் கேட்டார்.
இதனால் கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கிய கீர்த்தி பாண்டியன் பயில்வானை பார்த்து எங்க வீட்டுக்கு நீங்க வந்து பார்த்தீர்களா? எப்போதும் நாங்கள் சண்டை போட்டோம் என்று சூடாக பதிலளித்ததை பார்த்து பயில்வான் எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதனை அடுத்து பேட்டி ஒன்றில் அவர் பேசிய போது திருமணம் ஆகிவிட்டால் நடிகைகள் பெரும்பாலானோர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். இனிமேல் நீங்கள் எப்படி என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு அவர் நடிப்பு என்பது ஒரு தொழில் தான்.
ஒரு தொழிலுக்கு செல்லும் எந்த பெண்ணாவது திருமணத்திற்கு பிறகு தனது வேலையை விட்டு விடுகிறாளா? இல்லை தானே அது போல தான் எனக்கு திருமணம் ஆகிவிட்டால் நடிக்கக்கூடாது என்பது என்ன கட்டாயமா?
திருமணத்திற்கு பிறகு நான் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சனை? இந்த கேள்வியை அசோக் செல்வனிடம் நீங்கள் கேட்க முடியுமா? அதாவது ஆண்கள் திருமணம் செய்து விட்டால் தொடர்ந்து நடிக்கலாம்.
பெண்கள் என்றால் பிரச்சனை என்ற கண்ணோட்டத்தில் தான் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று சாட்டையடி பதிலை கூறியிருக்கிறார்.
இப்போது இவர் கூறி இருக்கக்கூடிய இந்த பதிலானது அனைவரையும் யோசிக்க வைக்க கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், தைரியமாக இது போன்ற நேர்மறையான கருத்துக்களை கூறியிருக்கும் கீர்த்தி பாண்டியனை பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள்.