இப்போது திரையுலகில் பிரபலமாக ஜொலித்த நடிகர் மற்றும் நடிகை தான் நடித்த முதல் படத்தை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? அப்படி வாய் திறந்தால் அந்த அசிங்கம் வெளிப்பட்டுவிடும் என்ற ரீதியில் அவர்கள் பேசாமல் இருக்கிறார்களா? என்று பலரும் பேசி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகளின் முதல் படம் ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட சம்பவம் திரை உலகில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் முதல் படம் வெளி வந்து அந்த படத்தின் மூலம் தான் நாங்கள் அறிமுகம் ஆன விஷயத்தை சொல்ல முடியாத ஹீரோ மற்றும் ஹீரோயினை பற்றிய பதிவினை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஹரிஷ் கல்யாண். மேலும் அமலாபால் பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியமே இல்லை.
இவர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர்.
இவர் தனக்கு சிறந்த அறிமுக படமாக கூறுவது பிரபு சாலமன் இயக்கத்தில் வெளி வந்த மைனா திரைப்படத்தை தான்.
அது போல 2010 ஆம் ஆண்டு முதற்கொண்டே ஹரிஷ் கல்யாண் தமிழ் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பியார் பிரேமா காதல் படம் தான் பெயர் சொல்லும் படமாக உள்ளது.
மேலும் அமலாபாலும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்து ஒரு படம் வெளிவந்துள்ளது என்று சொன்னால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு இவர்களது அறிமுக படமாக வெளி வந்துள்ளது.
இந்த படம் தான் சிந்து சமவெளி.
திரை உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சிந்து சமவெளி படத்தை இயக்குனர் சாமி தான் இயக்கியிருக்கிறார்.இதில் பள்ளியில் ஒன்றாக படிக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அமலாபால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஹரீஷ் கல்யாண் கல்லூரியில் படிப்பதற்காக விடுதியில் சேர்கிறார்.
இதனை அடுத்து அமலாபாலுக்கும், ஹரிஷ் கல்யாண் உடைய அப்பா வீராசாமிக்கும் இடையே உறவு ஏற்படும்.இதை பற்றி சொல்லும் படி இந்த படமானது நகரும்.
எனவே தான் இதைப்பற்றி இரு வரும் வெளிப்படையாக இந்த படம் தான் தங்களுக்கு அறிமுகப்படம் என்று இது வரை கூறியது இல்லை.