நயன்தாராவை ஓரம் கட்டி நம்பர் ஒன் ஆன திரிஷா..! என்ன காரணம் தெரியுமா..?

 

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று முதல் இடத்தை பிடித்திருந்த நயன்தாராவை தற்போது ஓரம் கட்டி திரிஷா முதல் இடத்தை பெற்றிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களோடு மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் கலைகட்டி வரும் திரிஷா மள மளவென்று எதிர்பாராத அளவு விஸ்வரூப வளர்ச்சியை அடைந்து தற்போது நம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்துவிட்டார். 

என்ன தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட் வரை சென்று அங்கும் பெயர் சொல்லும் அளவுக்கு நடித்து மேலும் பல பட வாய்ப்புக்களை பெற்றிருந்தாலும், இவரை பின்னுக்கு தள்ளி விட்டு எப்படி திரிஷா முன்னுக்கு வந்தார் என்று அனைவரும் யோசித்து வருகிறார்கள். 

தற்போது பிரபல ஊடகம் மாதம் வெளியிடும் டாப் பிரபலங்களின் பட்டியலில் ஆல் டைம் ஹையஸ்ட் ரேங்க் நடிகைகளின் லிஸ்ட் வெளி வந்துள்ளது. இந்த லிஸ்டில் நடிகை திரிஷா தான் நம்பர் ஒன்றாக தேர்வு செய்து இருக்கிறார்கள். 

மேலும் Most popular female Tamil film star என்ற லிஸ்டில் நடிகை திரிஷா முதலிடம் பிடித்து இரண்டாம் இடத்தை நயன்தாராவிற்கும் மூன்றாவது இடத்தை சமந்தாவிற்கும் ஒதுக்கி இருக்கிறார்கள். 

திரிஷா எப்படி முதல் இடத்தை பிடிக்க முக்கிய காரணம் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் தான். முதலில் எந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது பெரும் அளவு பேசப்பட்டது. 

அத்தோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜய்க்கு அவர் கொடுத்திருந்த லிப்லாக் கிஸ் பெரியளவு பேசப்பட்டு அவரை தற்போது முதல் இடத்திற்கு கொண்டு செல்ல உதவியுள்ளது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இந்த கருத்து உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள்