தல அஜித் வேண்டாம் என்று தூக்கி எறிந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுக்கு தன் திறமையை நிரூபிக்க கூடிய வகையில் தளபதி விஜயை வைத்து லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க உள்ள படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து இந்த படத்திற்கு லவ் டுடே பிரதீப்பை ஹீரோவாக போட்டு எஸ் ஜே சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி போன்ற நடிகைகளைக் கொண்டு எல்சியூ என்ற பெயரில் படத்தை படம் பிடிக்க ஆரம்ப கட்ட பூஜையை நேற்று போட்டார்கள்.
எப்படி ஒரு மனிதனுக்கு தன் பெயரில் இன்சியல் முக்கியமோ, அது போல திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியம். இந்த தலைப்பு தான் படத்தை அடையாளப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து நற்பெயரினை பெற்று தரும்.
எனவே தான் படத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுப்பதில் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களும் கவனமாக இருப்பார்கள்.
அந்த வகையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளிவரக்கூடிய படத்திற்கு எல்சியூ என்ற பெயரை தலைப்பு பெயராக வைத்திருக்கிறார்கள்.
இந்த தலைப்பை அவர் தற்போது தான் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஆனால் இந்த தலைப்பானது மூன்று வருடங்களுக்கு முன்பே ஒருவர், தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்த விஷயம் விக்னேஷ் சிவனுக்கும் தெரியும்.
எனினும் விக்னேஷ் சிவன் அவரை தொடர்பு கொண்டு இந்த தலைப்பை தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார்.
இந்நிலையில் தலைப்புக்காக பணம் கொடுப்பது பற்றி அவர் எதுவும் பேசாத நிலையில் பார்க்கலாம் என்று மட்டும் கூறியிருக்க, படத்திற்கான பூஜை போடும் அன்றே இது தான் டைட்டில் என்று அறிவித்தால் அந்த நபர் கோபம் அடைந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதனை அடுத்து இது பற்றிய கட்டப்பஞ்சாயத்து துவங்கி விட்டது.
இந்த சூழ்நிலையில் ஒன்று விக்னேஷ் சிவன் படத்திற்கான தலைப்பை மாற்றி வைக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து அந்த தலைப்பை வாங்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில் அதற்குள் பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது.
தனக்கு நேரம் சரியில்லை அடுத்த ,அடுத்த தோல்விகளை சந்தித்து வரக்கூடிய விக்னேஷ் சிவன் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.
இனி வரும் நாட்களில் அந்த தலைப்பை பணம் கொடுத்து வாங்குவாரா? அல்லது வேறு தலைப்பை வைப்பாரா? என்று நாம் பொருள் தெரிந்து பார்த்தால் நமக்கு பதில் எளிதாக தெரிந்து விடும்.