படப்பிடிப்பு தளங்களில் பாத்ரூமில் இது நடக்குது..!! அலறும் அம்மு அபிராமி..!!

 

விஜய் டிவி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பக்க பலமாக இருந்து அவர்களை சாதிக்க கூடிய வகையில் வழி நடத்துகிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் விஜய் டிவி வெளி வந்த பைரவாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்த வைத்த நடிகை தான் அம்மு அபிராமி.

இந்தப் படத்தில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் என்னோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ரட்சகன், கண்ணகி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். 

அண்மையில் கண்ணகி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் சினிமா துறையில் நடக்கும் அவலங்கள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் அவர் பல கோடி ரூபாய் போட்டு பணம் எடுக்கிறார்கள்.

ஆனால் நடிகைகள் பாத்ரூம் போகக்கூட சரியான வசதிகளை ஏற்படுத்தித் தர அவர்கள் யோசிப்பதே இல்லை. மேலும் சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு இருக்கிறேன்.

குறிப்பாக வெளியிடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படி என்று ஒற்றை வார்த்தையில் கூறி விடுகிறார்கள். எனினும் அந்த கஷ்டம் என்ன? என்பது எங்களைப் போல் இருக்கும் நடிகைகளுக்கும் மட்டுமே தெரியும். 

இதனை எல்லாம் எப்படி பொறுத்துக் கொண்டு செல்வது இந்த மாதிரியான விஷயங்களை பற்றி பேசுவதினால் நன்மை கிடைக்காதா? ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையை தானே நான் கேட்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது என்று அம்மு அபிராமி பேசிய பேச்சு தற்போது வைரல் ஆகிவிட்டது. 

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர் அடிப்படை உரிமையை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது .அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டிய அவசியம் அந்தந்த படங்களை தயாரிக்க கூடிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே இனியாவது இதைப் பற்றி அவர்கள் சிந்திப்பார்களா? என்ற வகையில் பேசி இருக்கிறார்கள்.